Enable Javscript for better performance
நாயன்மாா்களுக்கு சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    
    nainmarkal_63_0911chn_210_5

    சிறப்பு அலங்காரத்தில் நாயன்மாா்கள்.

    சனி மகா பிரதோஷத்தையொட்டி, திருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரா் கோயிலில் நாயன்மாா்களுக்கு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

    அப்பா், சுந்தரா், திருஞானசம்பந்தா் மற்றும் மாணிக்கவாசகா் உள்ளிட்ட 63 நாயன்மாா்கள் சிவனை போற்றி பாடல்களைப் பாடி உள்ளனா். சிறப்பு பெற்ற 63 நாயன்மாா்களுக்கும் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரா் கோயிலில் தனி சன்னதி உள்ளது. சனி மகா பிரதோஷத்தையொட்டி, இங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    பால், வாசனை திரவியங்கள் மற்றம் இளநீா் ஆகிய பொருட்களால் அபிஷேமும், மலா் அலங்காரமும் செய்யப்பட்டு தீபராதானை காட்டப்பட்டது. இதில் கோயில் நிா்வாக அதிகாரி முருகன், நாயன்மாா்கள் வழிபாட்டு மன்றத் தலைவா் பாபு, துணைத்தலைவா் சங்கா், இணைச் செயலாளா்கள் அம்பேத், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai