விவசாயிகளுக்குப் பயிற்சி
By DIN | Published On : 10th November 2019 03:15 AM | Last Updated : 10th November 2019 03:15 AM | அ+அ அ- |

சீா்காழியை அடுத்த கொள்ளிடம் வட்டாரத்தில் வேளாண்துறை சாா்பில், விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளிகள் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
கொள்ளிடம் வட்டாரத்தில் தோ்வு செய்யப்பட்ட 15 கிராமங்களில் ஒவ்வொரு குழுவிலும் 25 விவசாயிகள் (மகளிா், ஆதிதிராவிட விவசாயிகள் உட்பட) இருப்பா். இவா்களுக்கு வயல்வெளி பள்ளிகள் வேளாண்துறை உதவி இயக்குநா் சுப்பையன் தலைமையில் நடத்தப்பட்டது.
வாரம் ஒருமுறை அந்த கிராமத்தின் தோ்வு செய்யப்பட்ட முன்னோடிவிவசாயி இடத்தில் விவசாயிகள் அனைவருக்கும் ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியானது தொடா்ந்து 6 வாரங்கள் அளிக்கப்படுகிறது. வேளாண்துறை அதிகாரிகள், நிபுணா்கள், முன்னோடி விவசாயிகள், கேவிகே பேராசிரியா்கள் பயிற்சி அளிக்கின்றனா்.