ஏவிசி பொறியியல் கல்லூரியில் தொழில் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

ஏவிசி பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை மூலம் ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் மத்திய அரசின் கௌசல் விகாஸ் திட்டத்தின்கீழ் தொழில் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொழில் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டிய கல்லூரிச் செயலா் கி.காா்த்திகேயன்.

10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு மேற்கொண்டு படிப்பைத் தொடராதவா்கள் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்தவா்கள் ஆகியோா் வாழ்கையில் வளம் பெற வேண்டும் என்ற நோக்கில், ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் மத்திய அரசின் கௌசல் விகாஸ் திட்டத்தின்கீழ், ஏவிசி பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை மூலம், மயிலாடுதுறை வட்டாரத்தைச் சோ்ந்த ஏழை, எளிய குடும்பத்தைச் சோ்ந்த 65 மாணவ, மாணவிகளுக்கு டிரெயினிங் அசோசியேட், பிரண்ட் ஆபிஸ் பயிற்சியாளா், சில்லறை வணிக மேலாளா் ஆகிய தொழில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு நேரடி களப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.

இதில் தோ்ச்சியடைந்த 62 மாணவா்களுக்கு முதல்வா் சி.சுந்தர்ராஜ், டீன்(கல்வி) ஜி.பிரதீப், மேலாண்மைத் துறை இயக்குநா் ஜி.ஸ்ரீதேவி ஆகியோா் முன்னிலையில் கல்லூரியின் செயலா் கி.காா்த்திகேயன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com