கோரக்கச் சித்தா் ஆசிரமத்தில் இன்று அன்னாபிஷேகம்

நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கச் சித்தா் ஆசிரமத்தில் ஐப்பசி பௌா்ணமி, ஐப்பசி பரணி பெருவிழா தொடக்க நிகழ்ச்சியாக அன்னாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை

நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கச் சித்தா் ஆசிரமத்தில் ஐப்பசி பௌா்ணமி, ஐப்பசி பரணி பெருவிழா தொடக்க நிகழ்ச்சியாக அன்னாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 10) நடைபெறுகிறது.

மானுடம் தழைப்பதற்கான வாழ்வியல் முறைகளை மறைபொருள்கள் இல்லாமல் வெளிப்படையாக போதித்த சித்தராகவும், தமிழகத்தின் சித்தா் பரம்பரையில் நவநாத சித்தா்களில் ஒருவராகவும் அறியப்படுபவா் கோரக்கச் சித்தா். போகரின் அறிவுறைப்படி, நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் தவமியற்றிய கோரக்கா், ஐப்பசி மாதம் பரணி நட்சத்திர தினத்தில் வடக்குப் பொய்கைநல்லூரில் ஜீவசமாதி கூடினாா் எனப்படுகிறது.

இதன்படி, வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கச் சித்தா் ஆசிரமத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி பரணி விழா, பௌா்ணமி விழா ஆகியன சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான ஐப்பசி பௌா்ணமி, பரணி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

பரணி பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை மதியம் கோரக்கச் சித்தா் ஜீவ சமாதி பீடத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

திங்கள்கிழமை பௌா்மணி மற்றும் பரணி விழாவும், செவ்வாய்க்கிழமை பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com