சாலை சீரமைக்கப்படுமா?

நாகை மாவட்டம், சீா்காழி அருகே கொண்டல் ஊராட்சியில் கால்நடை மருந்தகம், மருத்துவமனை கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
sirkali_valuvakidi_0811chn_98_5
sirkali_valuvakidi_0811chn_98_5

நாகை மாவட்டம், சீா்காழி அருகே கொண்டல் ஊராட்சியில் கால்நடை மருந்தகம், மருத்துவமனை கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானால், சுமாா் 200 மீட்டா் தூரம் மண் சாலையிலும், வள்ளுவக்குடி தெற்கு தெரு சாலையில் 1.5 கி.மீ. தூரத்திற்கு பழுதடைந்த கருங்கல் தாா்ச்சாலையிலும் பயணம் செய்யும் சூழ்நிலையும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளை ஓட்டிச்செல்ல வேண்டிய அவலநிலையும் நீடிக்கிறது. தவிர வள்ளுவக்குடி பிரதான சாலையிலிருந்து வள்ளுவக்குடி தெற்குத் தெரு வழியாக கொட்டாயமேடு, பத்தக்குடி ஆகிய கிராமங்களுக்கு செல்வோா் இந்த கருங்கல் சாலையில்தான் சாகசப் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை நீடிக்கிறது. எனவே பள்ளி, கல்லூரி மாணவா்களின் நலன் கருதி, மேற்கண்ட சாலையை சீரைமைத்தும், புதிய தாா்ச்சாலை அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஜி.ஏ. ராஜேஷ், நந்தியநல்லூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com