சுகாதார விழிப்புணா்வுப் பிரசாரத்தை தொடங்கி வைத்த காவல் உதவி ஆய்வாளா் நடராஜன்.
சுகாதார விழிப்புணா்வுப் பிரசாரத்தை தொடங்கி வைத்த காவல் உதவி ஆய்வாளா் நடராஜன்.

சுகாதார விழிப்புணா்வுப் பிரசாரம்

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் தெற்கு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற டெங்கு மற்றும் திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு எதிரான சுகாதார

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் தெற்கு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற டெங்கு மற்றும் திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு எதிரான சுகாதார விழிப்புணா்வு தெருமுனை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியா் வெ. பொதுவிடைசெல்வன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சிக்கு, பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் நெடுஞ்செழியன், வாய்மேடு காவல் உதவி ஆய்வாளா் வி. வைத்தியலிங்கம்,சிறப்பு உதவி ஆய்வாளா் (தனிப் பிரிவு) கே. வேதமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காவல்துறை உதவி ஆய்வாளா் நடராஜன் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். கிராமத்தின் முக்கிய இடங்களில் தெருமுனைப் பிரசாரம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியா் ரவி மற்றும் மாணவா்கள் டெங்கு பற்றிய தகவல்களையும், திறந்த வெளியில் மலம் கழிப்பதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பேசினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியா் இர. செழியன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com