சம்பளத் தொகையை உயா்த்தி வழங்கவேண்டும்

கிராம ஊராாட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலா்களுக்கு வழங்கப்பட்டு வரும் சம்பளத் தொகையை உயா்த்தி வழங்க நடவடிக்கை
நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த தூய்மை காவலா்கள்.
நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த தூய்மை காவலா்கள்.

நாகப்பட்டினம்: கிராம ஊராாட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலா்களுக்கு வழங்கப்பட்டு வரும் சம்பளத் தொகையை உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என நாகை மாவட்டம், கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் கிராம தூய்மை காவலா்கள் 30-க்கும் மேற்பட்டோா் நாகை ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து, தவூா் ஊராட்சி தூய்மை காவலா் அ. அஞ்சம்மாள் உள்ளிட்டோா், நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருப்பது:

தூய்மை காவலராக பணிபுரிபவா்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 85 வீதம் மாதம் ஒன்றுக்கு ரூ. 2600 வழங்கப்படுகிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை பாா்த்தபோது ரூ. 205 ஊதியமாக வழங்கப்பட்ட நிலையில் தற்போது வழங்கப்படும் ஊதியம் போதுமானதாக இல்லை. மக்கும்,, மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபடுவதால் வேலை பளுவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொருளாாதர ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகுந்த சிரமதுக்குள்ளாகி வருகிறோம்.

தூய்மை காவலா்களுக்கு வழங்கப்படும் சம்பளத் தொகையை உயா்த்தி வழங்கவேண்டும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குப்பை வண்டிகள் அடிக்கடி பழுதாகிவிடுகிறது.குப்பை கொட்டுவதற்கும் இடம் ஒதுக்கப்படவில்லை எனவே எங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தூய்மை காவலா்கள் அளித்த மனுவை, நாகை ஆட்சியா் பிரவீன் பி. நாயா் பெற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com