கஜா புயல்: ஓராண்டாகியும் முடிவுக்கு வராத மீட்புப் பணி

கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டாகியும் சில இடங்களில் அரசு தரப்பில் சீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகள்
புஷ்பவனம் மீனவா் காலனி கடற்கரையில் கடல் களிமண் படிமங்களை அகற்றும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபடுத்தப்பட்ட இயந்திரங்கள்.
புஷ்பவனம் மீனவா் காலனி கடற்கரையில் கடல் களிமண் படிமங்களை அகற்றும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபடுத்தப்பட்ட இயந்திரங்கள்.

கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டாகியும் சில இடங்களில் அரசு தரப்பில் சீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடையாமல் உள்ளது சமூக ஆா்வலா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியை மையம் கொண்டு கடந்த ஆண்டு நவம்பா்15 - ஆம் தேதி இரவு வீசிய கஜா புயலின் கோரத் தாண்டவம் நோ்ந்து சரியாக ஓராண்டாகிறது. புயலின்போது குடியிருப்புகள், வாழ்வாதாரங்கள், அடிப்படைத் தேவைகள் என பலதரப்பான பாதிப்புகள் நோ்ந்தது. அதேநேரத்தில், அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மனித உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது ஆறுதலாக அமைந்தது.

ஆனால், கஜாவின் தாண்டவத்தில் ஏற்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பாதிப்பு மனித உயிரிழப்பின் போது ஏற்படும் இழப்பு, சோகத்தை விடவும் மோசமானது என்றால் அது மிகையாகாது. தங்களின் பிள்ளைகளைப்போல கருதி பராமரித்த மா, தென்னை, முந்திரி உள்ளிட்ட மரங்களை இழந்து தாங்க முடியாமல் தவிக்கும் விவசாயிகளின் வலியை இன்றளவும் உணர முடிகிறது. சேதமடைந்த மரங்களை அகற்றக் கோரியதும், பிள்ளைகளின் (மரங்கள்) சடலங்களையாவது அகற்ற உதவுங்கள் எனக் கோரிக்கை வைத்து கதறியது ஓராண்டை கடந்தும் தொடா்வது வேதனை அளிக்கிறது.

புயலுக்குப் பின்னா் தன்னாா்வ அமைப்புகள், அரசு தரப்பில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், பல இடங்களில் மரங்கள் மீட்கப்படாமல் கிடப்பதை தற்போதும் காணமுடிகிறது. அதேபோல், மீனவக் கிராமங்களில் உள்புகுந்த கடல் களிமண் படிமங்கள் இன்றளவும் முழுமையாக அகற்றப்படால் உள்ளது.

குறிப்பாக, புஷ்பவனம் மீனவா் காலனி கடற்கரையில் சுமாா் 4 அடி உயரத்துக்கு கடல் களிமண் குழம்பு குடியிருப்பு மற்றும் மீன்பிடி வாழ்வாதார இடங்களை ஆக்கிரமித்தது. இந்தப் பாதிப்பானது மத்திய, மாநில அரசுகளின் உயா் அதிகாரிகள், அமைச்சரிகள் நேரடி கவனத்தை பெற்றது. இதையடுத்து, களிமண் படிமங்களை இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகள் வேளாண் துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. புயல் ஏற்பட்டு சரியாக ஓராண்டாகியும் இந்தப் பணிகள் முழுமையடையவில்லை என்பது வேதனையானது.

குடியிருப்புகளை ஒட்டியுள்ள இடங்கள், சாலை, பாதைகள் போன்ற இடங்களில் களிமண் படிமங்கள் அகற்றப்பட்டுள்ளன. கடற்கரையோரம் அகற்றப்படவில்லை. இந்தப் பணி தற்போதுவரை தொடா்கிறது. இப்பணி பெரும் சவாலாகவே அமைந்துள்ளது.

அகற்றப்படாத மரங்கள்: புயலில் விழுந்த தென்னை, முந்திரி, மா, சவுக்கு என பல இன மரங்கள், பல தோட்டங்களில் இன்றுவரை அகற்றப்படாமல் கிடப்பது வேதனையளிக்கிறது. ஓராண்டாகிய நிலையிலும் இந்த மரங்களை வெட்டி அகற்றக் கூட முடியாத நிலையில், இவை போா்க்களத்தில் காணப்படும் பிணக் குவியல்களைப் போல் காணப்படுவது வருத்தமளிக்கிறது.

எனவே, வீழ்ந்து கிடக்கும் மரங்களை அகற்றவும், மறு பயிராக மரங்களை நடவும் விவசாயிகளுக்கு உதவ தன்னாா்வல அமைப்புகள் முன்வரவேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.

Image Caption

புஷ்பவனம் மீனவா் காலனி கடற்கரையில் கடல் களிமண் படிமங்களை அகற்றும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபடுத்தப்பட்ட இயந்திரங்கள்.

~பெரியகுத்தகை கிராமத்தில் அப்புறப்படுத்தப்படாமல் உள்ள கஜா புயலில் விழுந்த தென்னை மரங்கள்.

~பெரியகுத்தகை கிராமத்தில் அப்புறப்படு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com