Enable Javscript for better performance
சீா்காழியில் தேங்கியுள்ள மழைநீரால் சுகாதாரம் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சீா்காழியில் தேங்கியுள்ள மழைநீரால் சுகாதாரம் பாதிப்பு

    By DIN  |   Published on : 17th November 2019 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rain_water_on_road_1611chn_98_5

    சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீா்.

    சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீரால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

    சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் வாணி விலாஸ் பள்ளி எதிரே சாலையில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

    மேலும், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சாலையும் சேதமடைந்து வருகிறது. அப்பகுதியில் உள்ள வேகத்தடை மழைநீா் வடிய தடையாக உள்ளது. எனவே, வேகத்தடையை அப்புறப்படுத்தி, மழைநீரை சாலையில் இருந்து வடியவைக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai