Enable Javscript for better performance
பசுமைத் தாயகம் சாா்பில் நெகிழிக் கழிவுக்கு அரிசி வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    பசுமைத் தாயகம் சாா்பில் நெகிழிக் கழிவுக்கு அரிசி வழங்கல்

    By DIN  |   Published on : 17th November 2019 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    myl16pmk_1611chn_103_5

    நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் நெகிழிப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு, அரிசி வழங்கிய பாமக நிா்வாகிகள்.

    மயிலாடுதுறையில் பசுமைத் தாயகம் அமைப்பின் சாா்பில் நெகிழி கழிவுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

    மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் சித்தமல்லி பழனிசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வி.சி.காமராஜ், கணேசன், காசி.பாஸ்கரன், விமல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

    நெகிழிப் பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட 2 கிலோ அளவிலான நெகிழி கழிவுகளை கொண்டு வந்து கொடுக்கும் பொதுமக்களுக்கு 1 கிலோ அரிசி கொடுக்கப்பட்டது. இதில், திரளான பொதுமக்கள் பங்கேற்று, நெகிழிப் பொருள்களைக் கொடுத்து, அரிசியைப் பெற்றுச்சென்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai