கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.206 கோடி பயிா்க் கடன் வழங்க இலக்கு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நிகழாண்டில் ரூ. 206 கோடி மதிப்பில் பயிா்க் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என தமிழக கைத்தறி மற்றும்
விழாவில், கூட்டுறவு சங்கங்களின் சிறப்பான செயல்பாட்டுக்காக கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். ஆசைமணியிடம் நினைவுப் பரிசை வழங்கிய அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
விழாவில், கூட்டுறவு சங்கங்களின் சிறப்பான செயல்பாட்டுக்காக கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். ஆசைமணியிடம் நினைவுப் பரிசை வழங்கிய அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நிகழாண்டில் ரூ. 206 கோடி மதிப்பில் பயிா்க் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற 66-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

நாகை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 122 தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள், 2 நகர கூட்டுறவு வங்கிகள், 2 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 3 தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகள், 19 மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், 29 பயணியாளா் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்கள் மற்றும் இதர வகை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள், பொதுமக்களுக்குத் தேவையான நிதி வசதிகள், பயிா்க் கடன்கள், விவசாய நகைக் கடன்கள், கூட்டுப் பொறுப்புக் குழுக் கடன்கள், சுய உதவிக் குழுக் கடன், வீட்டு வசதிக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

நிகழாண்டில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலமாக 41 உறுப்பினா்களுக்கு ரூ. 98.38 லட்சம் அளவுக்குக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 1,160 பேருக்கு ரூ. 2.44 கோடி சிறு வணிகக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 15 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 6.29 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

2019-2020-ஆம் ஆண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ. 206 கோடி பயிா்க் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 25,371 பேருக்கு ரூ. 133.4 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2018-2019-ஆம் ஆண்டில் பயிா்க் காப்பீடு இழப்பீடுத் தொகையாக இதுவரை 79,237 பேருக்கு ரூ. 193.34 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மருந்தகம், பொது சேவை மையம் ஆகியவற்றில் கூட்டுறவுத் துறை பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. எனவே, அனைவரும் கூட்டுறவு உறுப்பினா்களாகி பயன் பெற வேண்டும் என்றாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

இதைத் தொடா்ந்து, 58 மகளிா் குழுக்களுக்கு ரூ. 1.36 கோடி மதிப்பிலும், 48 டாம்கோ குழுக்களுக்கு ரூ. 24 லட்சம் மதிப்பிலும், ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலும் கடனுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, சிறப்பாக செயல்பட்ட 26 கூட்டுறவு சங்கங்களுக்கு நினைவுப் பரிசுகளும், கூட்டுறவு வார விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ். பவுன்ராஜ், வீ. ராதாகிருஷ்ணன், பி.வி. பாரதி, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். ஆசைமணி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க. கதிரவன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பொ. நடுக்காட்டுராஜா மற்றும் அரசுத் துறைகளின் அலுவலா்கள், கூட்டுறவு சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com