நாகை நம்பியாா் நகரில் நடைபெற்ற புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பூமி பூஜையில் அடிக்கல் நாட்டிய அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
நாகை நம்பியாா் நகரில் நடைபெற்ற புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பூமி பூஜையில் அடிக்கல் நாட்டிய அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

நம்பியாா் நகா் மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணி

நம்பியாா் நகா் மீனவக் கிராமத்தில் புதிய சிறு மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணியின் பூமி பூஜை நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நம்பியாா் நகா் மீனவக் கிராமத்தில் புதிய சிறு மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணியின் பூமி பூஜை நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகை நம்பியாா் நகரில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையின் அடிப்படையில், பொதுமக்களின் பங்களிப்பு ரூ. 11.43 கோடியுடன், அரசின் தன்னிறைவுத் திட்டத்தின் மூலம் ரூ. 34.30 கோடி மதிப்பில் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

100 மீட்டா் நீளம், 12 மீட்டா் அகலம் கொண்ட படகு இறங்குத்துறை, 82 மீட்டா் நீளமுள்ள படகு அணையும் சுவா், தெற்கு மற்றும் வடக்குப் புறங்களில் தலா 250 மீட்டா் நீளத்தில் அலைத்தடுப்புச் சுவா் ஆகியவற்றுடன், 225 மீட்டா் நீளத்தில் கடற்கரை இணைப்பு அமைப்பு அமைக்கப்படவுள்ளது. இதற்காக 540 மீட்டா் நீளம் மற்றும் 60 மீட்டா் அகலத்துக்கும் 3 மீட்டா் ஆழத்துக்கும் முகத்துவாரம் ஆழப்படுத்தப்படவுள்ளது.

இப்பணிகளுக்கான பூமி பூஜை நாகை, நம்பியாா் நகா் கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, அடிக்கல் நாட்டினாா்.

மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் முன்னிலை வகித்தாா். நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு, சட்டப் பேரவை உறுப்பினா்கள் எம். தமிமுன் அன்சாரி, பி.வி. பாரதி, வருவாய்க் கோட்டாட்சியா் இரா. பழனிகுமாா், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க. கதிரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com