திருக்குவளையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருக்குவளையில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீா்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

திருக்குவளையில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீா்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியாா் திருமண அரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ. எஸ். மணியன் 567 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 43 லட்சத்து 83 ஆயிரத்து 832 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, வருவாய் கோட்டாட்சியா் இரா. பழனிகுமாா், தனித்துணை ஆட்சியா் கே. ராஜன்,திருப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் வேதையன், திருக்குவளை வட்டாட்சியா் இளங்கோவன் (பொறுப்பு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com