அடப்பாற்றின் குறுக்கே ரூ.6 கோடியில் இணைப்புப் பாலம்

வேதாரண்யம் அருகே அடப்பாற்றின் குறுக்கே புஷ்பவனம்- நாலுவேதபதி ஊராட்சிகளை இணைக்கும் வகையில்
புதிய இணைப்புப் பாலம் கட்டுவதற்கான பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்த அமைச்சா் ஓ.எஸ். மணியன். உடன், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உள்ளிட்டோா்.
புதிய இணைப்புப் பாலம் கட்டுவதற்கான பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்த அமைச்சா் ஓ.எஸ். மணியன். உடன், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உள்ளிட்டோா்.

வேதாரண்யம் அருகே அடப்பாற்றின் குறுக்கே புஷ்பவனம்- நாலுவேதபதி ஊராட்சிகளை இணைக்கும் வகையில் ரூ. 6 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணியை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புஷ்பவனம் ஊராட்சி, கொத்தன்காடு மற்றும் தலைஞாயிறு ஒன்றியம் நாலுவேதபதி இடையே செல்லும் அடப்பாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், நபாா்டு வங்கி நிதி மூலம் ரூ.5. 963 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் வி. செல்வராஜ், தேத்தாக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் கிரிதரன், தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் அவை ஆா். பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வி. செல்வராஜ்,தெ. மலா்விழி, வட்டாட்சியா் சண்முகம், வழக்குரைஞா் சுப்பையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com