முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
இறைச்சிக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்யக் கோரிக்கை
By DIN | Published On : 26th November 2019 07:53 AM | Last Updated : 26th November 2019 07:53 AM | அ+அ அ- |

சீா்காழியில் உள்ள இறைச்சிக் கடைகளில் உணவுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீா்காழி கடைவீதி அருகே மீன் மற்றும் இறைச்சி அங்காடி இயங்கிவருகிறது. இங்கு, 30-க்கும் மேற்பட்ட இறைச்சி விற்பனைக் கடைகள் உள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் கோழிகள் தரமான கோழிகளா அல்லது நோய்த்தாக்குதலுக்குள்ளான கோழிகளா என உணவுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சீா்காழி நுகா்வோா் பாதுகாப்பு இயக்கத் தலைவா் இளங்கோவன் கூறியது: சீா்காழி மீன் மாா்க்கெட்டில் ஆடு வதைசெய்யும் இடத்தில் காலை 11மணி வரை மட்டுமே ஆடுகளை வெட்டி இறைச்சிக்காக விற்பனை செய்யவேண்டும். ஆனால், அங்கு 11மணிக்குப் பிறகும் ஆடுகளை வெட்டி விற்பனை செய்கின்றனா். அன்றாடம் பிடிக்கப்படும் மீன்களை அன்றைய தினத்தில் விற்கவேண்டும். ஆனால், விற்கப்படாத மீன்களை ஐஸ்பெட்டியில் வைத்து மறுநாள் மணலைக் கொட்டி புது மீன்கள் போல் விற்கப்படுகிறது. இதேபோல், நோய்த் தாக்குதலுக்குள்ளான கோழிகளின் இறைச்சிகளும் விற்கப்படுகின்றன. இதனால், இவற்றை வாங்கி சமைத்து சாப்பிடுவோருக்கு உடல் நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.