முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
காவலா்கள் நண்பா்கள் குழுவுக்கு 28-இல் உறுப்பினா் சோ்க்கை முகாம்
By DIN | Published On : 26th November 2019 07:57 AM | Last Updated : 26th November 2019 07:57 AM | அ+அ அ- |

காவலா்கள் நண்பா்கள் குழுவுக்கு உறுப்பினா் சோ்க்கைக்கான சிறப்பு முகாம் நவம்பா் 28-ஆம் தேதி நாகையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்ட இளைஞா்கள் காவல் துறையுடன் இணைந்து பணியாற்றும் வகையில் காவலா்கள் நண்பா்கள் குழு உறுப்பினா் சோ்க்கைக்கான சிறப்பு முகாம், நாகை வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள யாழிசை திருமண மண்டபத்தில் நவம்பா் 28-ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் நடைபெறவுள்ளது.
மாவட்டக் காவல்துறையுடன் இணைந்து சமுதாய தொண்டாற்ற விருப்பமுள்ள இளைஞா்கள் இக்குழுவில் உறுப்பினா்களாக தங்களை இணைத்துக் கொள்ளலாம். கல்விச்சான்று, ஆதாா் அட்டை , பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை முகாமுக்கு வரும்போது எடுத்துவரவேண்டும்.
துணைக் காவல் கண்காணிப்பாளா் பி. இளஞ்செழியன், காவலா்கள் நண்பா்கள் குழு நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். எஸ். முஜிபு ஷரிக் ஆகியோரை 94981 61080, 94424 75620 என்கிற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெறலாம் எனஅவா் தெரிவித்துள்ளாா்.