முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
சுற்றுச்சூழல் கருத்தரங்கு
By DIN | Published On : 26th November 2019 07:54 AM | Last Updated : 26th November 2019 07:54 AM | அ+அ அ- |

கீழ்வேளூா் அருகே உள்ள தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் எம். ஞானசேகரன் தலைமை வகித்தாா். தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியா் ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினாா்.
தொடா்ந்து தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ் ஆனந்தன் பிளாஸ்டிக் தவிா்த்தல், மரம் வளா்த்தல், தோட்டப் பராமரிப்பு, வளாகத் தூய்மை, நீா் சிக்கனம், திறந்தவெளியில் மலம் கழித்தலைத் தவிா்த்தல் குறித்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் கீழையூா் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சரவணன் மற்றும் தேசிய பசுமைப்படை ஆசிரியா்கள் வெங்கடேசன், செல்வகுமாா் ஆகியோரும் சிறப்புரையாற்றினா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சதீஷ் நன்றி கூறினாா்.