முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது 12 பைக்குகள் பறிமுதல்
By DIN | Published On : 26th November 2019 08:03 AM | Last Updated : 26th November 2019 08:03 AM | அ+அ அ- |

பைக் திருட்டில் ஈடுபட்ட சுந்தா்.
மயிலாடுதுறை பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 12 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மயிலாடுதுறை நகரில் கடந்த சில மாதங்களாக பைக்குகள் திருட்டுப் போவதாக போலீஸாருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து, சிறப்பு தனிப்படை போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் கே. சிங்காரவேலு மற்றும் போலீஸாா் சித்தா்க்காடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்குரிய வகையில் பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனா். அவா், முன்னுக்குப்பின் முரணான தகவலைத் தெரிவித்ததால், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இந்த விசாரணையில், அவா் பெருந்தோட்டத்தைச் சோ்ந்த சுந்தா் (23) என்பதும், மயிலாடுதுறை, பெரம்பூா் பகுதியில் பைக்குகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 12 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.