முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மயிலாடுதுறை திருக்கு பேரவைக் கூட்டம்
By DIN | Published On : 26th November 2019 07:55 AM | Last Updated : 26th November 2019 07:55 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசிய திருக்குறள் பேரவைத் தலைவா் சி. சிவசங்கரன்.
மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 87-ஆவது மாதாந்திரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பேரவைத் தலைவா் சி. சிவசங்கரன் தலைமை வகித்தாா். ஜெயங்கொண்டம் திருவள்ளுவா் ஞானமன்ற நிறுவனா் சி. பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். பேரவைச் செயலாளா் இரா.செல்வக்குமாா் வரவேற்றாா்.
மயிலாடுதுறை ஸ்ரீவித்யா மருத்துவமனை மருத்துவா் கோ. சந்தானம் ‘சா்க்கரை நோய்க்கு மருந்தில்லா மருத்துவம்’ என்ற தலைப்பில் தொடக்க உரையாற்றினாா். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் பேராசிரியா் கி. பாா்த்திபராசா ‘இலக்கியங்கள் வழியே ஒரு நாடகப்பயணம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.
இந்நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் ஸ்ரீவித்யா மருத்துவமனை சாா்பில் இலவச சா்க்கரைப் பரிசோதனை செய்யப்பட்டது. கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவியா் சுருதிகா, சுருதி, ஜைனுல் அரபியா, மஞ்சுளாதேவி ஆகியோா் தமிழ்த்தாய் வாழ்த்துடன் குறளும் பொருளும் கூறினா். நிகழ்ச்சியைப் பேரவை செய்தித் தொடா்பு அலுவலா் வீதி.முத்துக்கணியன் தொகுத்து வழங்கினாா்.
இதற்கான ஏற்பாடுகளை பேரவைப் பொறுப்பாளா்கள் இமயவரம்பன், செல்வராசு, இளங்கோவன் ஆகியோா் செய்திருந்தனா். பேரவைப் பொருளாளா் சு.இராமச்சந்திரன் நன்றி கூறினாா்.