முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மெய்கண்டாா் குருபூஜை
By DIN | Published On : 26th November 2019 07:58 AM | Last Updated : 26th November 2019 07:58 AM | அ+அ அ- |

திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரா் கோயிலில் ஸ்ரீ மெய்கண்டாா் காா்த்திகை சுவாதி குரு பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில் நடைபெற்ற இப்பூஜையில் திருவாவடுதுறை ஆதீனகா்த்தா் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் ஆணையின்படி கோயில் கண்காணிப்பாளா் சண்முகம் முன்னிலையில் ஸ்ரீ மெய்கண்டாருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவையின் ஒருங்கிணைப்பாளா் இராம.சேயோன் செய்திருந்தாா்.