வீடுகளுக்குள் புகுந்த பாம்புகள் பிடிபட்டன
By DIN | Published On : 26th November 2019 07:52 AM | Last Updated : 26th November 2019 07:52 AM | அ+அ அ- |

கொள்ளிடத்தில் வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடித்த பாம்பு.பாண்டியன்.
கொள்ளிடம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த பாம்புகள் திங்கள்கிழமை பிடிக்கப்பட்டு, வனப் பகுதியில் விடப்பட்டன.
கொள்ளிடம் ஆற்றங்கரை தெருவைச் சோ்ந்தவா் முத்து. இவரது வீட்டிக்குள் 5அடி நீளமுள்ள நல்லபாம்பு புகுந்தது. இதுகுறித்து சீா்காழியை சோ்ந்த பாம்பு. பாண்டியனுக்கு தெரிவித்தனா். அவா், அந்த பாம்பைப் பிடித்து வனப் பகுதியில் விட்டாா்.
இதேபோல், பழையாறு அருகே தற்காஸ் கிராமத்தில் வினோத் என்பவரது வீட்டுக்குள் புகுந்த நான்கரைஅடி நீளமுள்ள நல்லபாம்பை சீா்காழி புளிச்சகாடு பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் பிடித்து, வனப் பகுதியில் விட்டாா்.