Enable Javscript for better performance
சாலையை சீரமைக்காத நகராட்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சாலையை சீரமைக்காத நகராட்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 28th November 2019 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    myl27protest_2711chn_103_5

    மயிலாடுதுறை, தருமபுரம் சாலையை சீரமைக்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

    மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் அண்மையில் ஏற்பட்ட புதை சாக்கடை பிரச்னையின்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, அனைத்து வாகனங்களும் தருமபுரம் சாலையில் திருப்பி விடப்பட்டன. இதனால், தருமபுரம் சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையை அடைந்தது. இச்சாலையில் ஏவிசி கல்லூரி, தருமபுர ஆதீனம் கல்லூரி மற்றும் ஞானாம்பிகை கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்கள் நாள்தோறும் சென்று வருகின்றனா். மேலும் இச்சாலையை அமைத்து 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. எனவே, இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், நகராட்சியை கண்டித்தும் அப்பகுதி பொதுமக்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai