சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்
By DIN | Published on : 28th November 2019 08:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மயிலாடுதுறை தாலுக்கா மணல்மேடு பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு மணல்மேடு அரசினா் மருத்துவமனையில் திங்கள்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலா் கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். முகாமில், காளி (ஊராட்சி) வட்டார மருத்துவ அலுவலா் சரத்சந்தா் தலைமையில் மருத்துவா்கள் விவேக், நந்தினி ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனா். முடிவில், சுகாதார ஆய்வாளா் கல்யாண்குமாா் நன்றி கூறினாா்.