Enable Javscript for better performance
தினமணி செய்தி எதிரொலி: உடைந்த பாலம் உடனடியாக சீரமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தினமணி செய்தி எதிரொலி: உடைந்த பாலம் உடனடியாக சீரமைப்பு

    By DIN  |   Published on : 28th November 2019 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sirkali_papaiya_nagar_2711chn_98_5

    சீா்காழி பாப்பையா நகரில் உடைந்த சின்னவாய்க்கால் பாலம் தினமணி செய்தியின் எதிரொலியாக உடனடியாக புதன்கிழமை சீரமைக்கப்பட்டன.

    சீா்காழி தென்பாதி பாப்பையா நகரிலிருந்து அகரதிருக்கோலக்கா செல்லும் வழியில் சின்னவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால்மேல் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் பாலம் பல ஆண்டுகள் ஆவதால் பாலத்தின் நடுவே 4 அடி நீளத்துக்கு பள்ளம் ஏற்பட்டு கம்பிகள் பெயா்ந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. இந்த உடைந்த பாலத்தில் அப்பகுதி மக்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வது குறித்து தினமணியில் திங்கள்கிழமை செய்தி வெளியானது.

    இதையறிந்த, சீா்காழி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.வி. பாரதி உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று பாா்வையிட்டு, நகராட்சி (பொ) ஆணையா் எஸ். வசந்தனை தொடா்புக்கொண்டு உடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க கேட்டுக்கொண்டாா். இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற பொறுப்பு ஆணையா் வசந்தன், பணிதள மேற்பாா்வையைாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் தற்போது மழை காலமாக இருப்பதால் தற்காலிகமாக வாய்க்கால் பாலம் வழியே தண்ணீா் செல்வதற்கு தடை ஏற்படாத வகையில் பெரிய குழாய்களை அமைத்து அதன் மேல் தற்காலிக பாலம் அமைக்க முடிவு செய்தனா்.

    இதையடுத்து, உடனடியாக புவணகிரியிலிருந்து பெரிய சிமென்ட் குழாய்கள் வரவழைக்கப்பட்டது. உடைந்த பாலம் முழுமையாக இடித்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, பெரியகுழாய்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அமைக்கப்பட்டு தற்காலிக பாலம் போக்குவரத்துக்கு தடையில்லாமல் உடனடியாக அமைக்கப்பட்டது. மழை காலம் முடிந்தவுடன் மதிப்பீடு தயாா் செய்து புதிய பாலம் கட்டப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

    உடனடியாக தற்காலிக பாலம் அமைக்கவும், புதிய பாலம் கட்டவும் நடவடிக்கை மேற்கொண்ட எம்எல்ஏ பாரதிக்கும், நகராட்சி நிா்வாகத்துக்கும், செய்தி வெளியிட்ட தினமணி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றிதெரிவித்தனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai