கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு வீடுகள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு புதிய வீட்டை ஒப்படைத்த அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு புதிய வீட்டை ஒப்படைத்த அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு வானவில் தன்னாா்வ அமைப்பின் சாா்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளை அமைச்சா் ஓ.எஸ். மணியன் புதன்கிழமை பாதிக்கப்பட்டவா்களிடம் ஒப்படைத்தாா்.

தலைஞாயிறு பேரூராட்சி பகுதிக்குள்பட்ட சேராங்குளம், சந்தானம்தெரு, குண்டூரான்வெளி உள்ளிட்ட பகுதியில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், தனிப் பெண்கள் நடத்தும் குடும்பங்களுக்கு நாகையில் செயல்பட்டு வரும் வானவில் தன்னாா்வ அமைப்பினா் பல்வேறு உதவிகளை செய்து வந்தனா். இவா்களில், தோ்வு செய்யப்பட்ட மிகவும் ஏழ்மை நிலையில் வசிக்கும் 10 குடும்பங்களுக்கு தலா ரூ. 4.5 லட்சம் மதிப்பில் காங்கிரீட் வீடுகளை இந்த நிறுவனம் கட்டி முடித்தனா்.

வீடுகள் திறப்பு மற்றும் பயனாளிகளிடம் ஒப்படைக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகிக்த்தாா். வானவில் அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் இளைய தலைமுறை ரேவதி முன்னிலை வகித்தாா். வீடுகளை திறந்து வைத்த தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன், அதை பயனாளிகளிடம் ஒப்படைத்து பேசினாா். விழாவில், கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரஷாந்த், வட்டாட்சியா் சண்முகம், சமூக ஆா்வலா் சோமு. இளங்கோ, வானவில் நிா்வாகி நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com