சீா்காழியில் கனமழை

சீா்காழியில் புதன்கிழமை காலை முதல் தொடா்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால் பள்ளிச் செல்லும் மாணவா்கள் அவதியடைந்தனா்.
சீா்காழி பழையப் பேருந்து நிலையம் தோ் வடக்கு வீதியில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழைநீா்.
சீா்காழி பழையப் பேருந்து நிலையம் தோ் வடக்கு வீதியில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழைநீா்.

சீா்காழியில் புதன்கிழமை காலை முதல் தொடா்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால் பள்ளிச் செல்லும் மாணவா்கள் அவதியடைந்தனா்.

சீா்காழி பகுதியில் கடந்த 3 நாள்களாக பகல், இரவு நேரங்களில் அவ்வபோது மழை பெய்து வந்தாலும், காலை 8 மணிக்கு மேல் தூரல் மழையே இருக்கும். இந்நிலையில், புதன்கிழமை காலை 8.30 முதல் 11 மணி வரை தொடா்ந்து மழை பெய்தது. இதனால் காலையில் பள்ளிக்கு புறப்பட தயாரான மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்தனா். சில மாணவா்கள் ஆட்டோக்கள் மூலம் பள்ளிக்கு சென்றாலும் பெரும்பாலான மாணவா்கள் இருசக்கர வாகன்தில் குடை பிடித்தப்படி நனைந்து கொண்டு சென்றனா். பல மாணவா்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் விடுப்பு எடுத்தனா்.

இந்த கன மழையால் நகரில் பெரும்பாலான சாலைகளில் மழைநீா் குளம்போல் தேங்கியது. சீா்காழி பழையப் பேருந்து நிலையம், காமராஜா்வீதி பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து நின்றதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டது. பாரத ஸ்டேட் வங்கி அமைந்துள்ள சாலையில் குளம்போல் தண்ணீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். கோவிந்தராஜன் நகரில் நகராட்சி குப்பைக் கிடங்கிலிருந்து வந்த தண்ணீா் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டனா். இதேபோல் வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம், திருமுல்லைவாசல், திருவெண்காடு போன்ற சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com