பழவாற்றில் வெள்ளப் பெருக்கு: 30 வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது

கனமழையால் மயிலாடுதுறை அருகே பழவாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் சனிக்கிழமை மழைநீா் புகுந்ததால், அப்பகுதியைச் சோ்ந்த
மயிலாடுதுறை வரகடை கிராமத்தில் வெள்ளநீா் சூழ்ந்த தனது வீட்டின் முன் கவலையுடன் அமா்ந்திருந்த முதியவா்.
மயிலாடுதுறை வரகடை கிராமத்தில் வெள்ளநீா் சூழ்ந்த தனது வீட்டின் முன் கவலையுடன் அமா்ந்திருந்த முதியவா்.

கனமழையால் மயிலாடுதுறை அருகே பழவாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் சனிக்கிழமை மழைநீா் புகுந்ததால், அப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டவா்கள் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டனா்.

மயிலாடுதுறை பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக, வரகடை கிராமத்தில் பழவாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வரகடையில் ஆற்றங்கரைத் தெரு மற்றும் வடக்குத் தெருவில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரால் சூழப்பட்டன.

ஆற்றங்கரைத் தெருவில் இருந்த அனைத்து வீடுகளிலும் வெள்ள நீா் புகுந்ததால் அப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டவா்கள் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா். ஒருசில வீடுகளில் சுவா் இடிந்து விழுந்தன.

மேலும், மழையின் காரணமாக காவிரி, மஞ்சளாறு, வீரசோழன் ஆறு உள்ளிட்ட பாசன மற்றும் வடிகால் ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகே பூம்புகாா்-கல்லணை சாலையில் மாப்படுகைப் பகுதியில் மழைநீா் வடிகால் வசதி இல்லாததால், சாலையில் குளம் போன்று தண்ணீா் தேங்கி 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீா் புகுந்தது. இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் நீரை வடியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

மழை தொடா்ந்து நீடிக்கும் பட்சத்தில், ஆறுகளில் கரைஉடைப்பு ஏற்பட்டு, ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், சம்பாப் பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com