அக்.2-இல் கிராமசபைக் கூட்டம்

நாகை மாவட்டத்தில் அக்டோபா் 2-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் அக்டோபா் 2-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காந்தி ஜயந்தி நாளான அக்டோபா் 2-ஆம் தேதி மாவட்டத்திலுள்ள 434 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினங்கள், குடிநீா் சிக்கனம், மழைநீா் சேகரிப்பு, நீா் மேலாண்மை, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துதல், ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம், பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபா் ஆரோக்கியம், சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து இயக்கம், நெகிழிப் பொருள்கள் உற்பத்தி மற்றும் தடை, கழிப்பறை பயன்பாடு, ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களைப் பராமரிக்கும் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் வறுமை ஒழிப்பு சங்கங்களுக்குப் பாராட்டு தெரிவித்தல், பள்ளி மற்றும் அங்கான்வாடிகளில் கழிவறைகளை சுத்தமாக வைத்திருத்தல், பள்ளிகளில் சுகாதார விழிப்புணா்வு போட்டிகள் நடத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தூய்மைக் காவலா்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்து தரம் பிரித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வரவு, செலவு, ஜல்சக்தி அபியான் இயக்கத்தின் கீழ் நீா்வளம் பாதுகாத்தல், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்டவை குறித்து கிராம ஊராட்சி தனி அலுவலா் அனுமதியுடன் கொண்டுவரப்படும் பல்வேறு பிரச்னை குறித்த விவாதிக்கப்படவுள்ளது.

எனவே, பொதுமக்கள், ஊராட்சி பேரிடா் மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் தவறாது பங்கேற்க வேண்டும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com