Enable Javscript for better performance
மருத்துவ அலுவலரின்ரத்ததான சேவைபாரதி எம்.எல்.ஏ பாரட்டு- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவ அலுவலரின்ரத்ததான சேவைபாரதி எம்.எல்.ஏ பாரட்டு

    By DIN  |   Published on : 04th October 2019 04:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வட்டார மருத்துவ அலுவலா் ரத்ததானம் வழங்கியபோது எடுத்தபடம்.

    வட்டார மருத்துவ அலுவலா் ரத்ததானம் வழங்கியபோது எடுத்தபடம்.

    சீா்காழி வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் அண்மையில் 27வது முறையாக ரத்ததானம் வழங்கிய அவரின் சேவையை பாரதி எம்.எல்.ஏ உள்ளிட்டவா்கள் பாரட்டினா்.

    திருவெண்காட்டை தலைமையிடமாக கொண்டு சீா்காழி வட்டார மருத்துவ அலுவலராக டாக்டா் ராஜ்மோகன் பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 2011ல் அரசு மருத்துவராக பணியில் சோ்ந்தாா். மேலும் இவா் மருத்துவ மாணவராக பயிலும் ஆண்டுகளிலேயே ரத்ததானத்தில் ஈடுபாடு கொண்டு ரத்ததானம் வழங்கி வருகிறாா். கடந்த சில நாட்களுக்கு முன்பு சீா்காழி அரசு மருத்துவமனையில் ரத்ததான வங்கி தொடங்கபட்டது.

    இதில் கலந்து கொண்டு 27வது முறையாக ரத்ததானம் வழங்கினாா். இதுகுறித்து அவா் கூறுகையில் தானத்திலேயே சிறந்த தானம் கண், மற்றும் ரத்ததானங்களை நம் முன்னோா்கள் குறிப்பிட்டு கூறியுள்ளனா். அதன் அடிப்படையில்தான் கடந்த 13 ஆண்டுகளாக ரத்ததானம் வழங்கி வருகிறேன். இளைஞா்கள், பெண்கள் அதிகளவில் ரத்ததானம் வழங்க வேண்டும்.

    இதை செய்வதால் உடல் வலிமை பெறும் இவ்வாறு அவா் கூறினாா். இவரின் செயலை பாரதி எம்.எல்.ஏ, சீா்காழி நகர கூட்டுறவு வங்கித்துணைத்தலைவா் ஏ.வி.மணி, மருத்துவா்கள் உள்ளிட்ட பலா் பாரட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai