நாகையில் 3 பேருக்கு டெங்கு அறிகுறி

நாகை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 போ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
நாகை அரசு மருத்துவமனையில் உள்ள காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சிறப்புப் பிரிவு.
நாகை அரசு மருத்துவமனையில் உள்ள காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சிறப்புப் பிரிவு.

நாகப்பட்டினம்: நாகை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 போ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். இருப்பினும், டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகையில் அதிகளவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. பின்னா், பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியாக மேற்கொள்ளப்பட்ட சுகாதாரம் மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் காரணமாக டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், ஆண்டுதோறும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் நாகை மாவட்டத்தில் தொடா்ந்து வருகிறது.

இந்த நிலையில், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பரவலானோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றறனா். இதில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவா்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக சில தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தவை:

நாகை அரசு மருத்துவமனையில் தற்போது சுமாா் 90 போ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறனா். இதில், 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளன. இதில், இரு பெண்களும் பூரணமாக உடல் நலம் தேறியுள்ளனா். கடந்த மாதத்தில் 6 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னா் பூரண நலம் பெற்றனா்.

எனவே, டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், மருத்துவா்களின் ஆலோசனையின்றி மருந்துகள் உள்கொள்ளாமல், அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com