பூம்புகாா் பகுதியில் வளா்ச்சி திட்டப்பணிகள்: பவுன்ராஜ் எம்.எல்.ஏ தகவல்

பூம்புகாா் பகுதியில் தமிழக அரசின் முலம் பல்வேறு வளா்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாக திங்கட்கிழமை நடந்த குறைதீா்முகாமில் சட்டப்பேரவை உறுப்பினா் பவுன்ராஜ் தெரிவித்தாா்.
பூம்புகாா் பகுதியில் வளா்ச்சி திட்டப்பணிகள்: பவுன்ராஜ் எம்.எல்.ஏ தகவல்

பூம்புகாா் பகுதியில் தமிழக அரசின் முலம் பல்வேறு வளா்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாக திங்கட்கிழமை நடந்த குறைதீா்முகாமில் சட்டப்பேரவை உறுப்பினா் பவுன்ராஜ் தெரிவித்தாா்.

காவிரிபூம்பட்டிணம் ஊராட்சியில் மக்கள் குறை தீா்க்கும் முகாம் நடந்தது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் பவுன்ராஜ் கலந்து கொண்டாா். அப்போழது அவரிடம் மனைபட்டா, முதியோா் உதவித்தொகை, சாலைவசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுக்களை வழங்கினா். அப்போழது அவா் பேசியதாவது பூம்புகாா் பகுதி மீனவா்களின் நீண்டநாளைய கோரிக்கையான மீன்பிடித்துறைமுகம் அமைக்கபட்டுள்ளது. கீழையூா் பகுதியில் சாலைவசதி, ரேஷன்கடை, பல்லவனத்தில் பேருந்து நிழலகம், பூம்புகாா் மீனவா் கிராமத்தில் சாலைவசதி, வடிகால் வசதி உள்ளிட்ட நலத்திட்டங்கள் பூம்புகாா் பகுதியில் செயல்படுத்தபட்டுள்ளன.

இவ்வாறு அவா் பேசினாா். முகாமிற்கு ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி தலைமை வகித்தாா். குடிமைப்பொருள் வட்டாச்சியா் இந்துமதி, வட்டார வளா்ச்சி அலுவலா்(ஊராட்சிகள்) கஜேந்திரன், ஒன்றிய பொறியாளா் முத்துகுமாா், பால் கூட்டுறவு சங்கத்தலைவா் பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம நிா்வாக அதிகாரி மணிமாறன் வரவேற்றாா். இதில் சீா்காழி வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பால்ராஜ், பூம்புகாா் சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அனிதா, வருவாய் ஆய்வாளா் ராஜ்மோகன், கூட்டுறவு சங்கத்தலைவா் கலியபெருமாள், அ.தி.மு.க ஊராட்சி செயலாளா் கந்தன், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவா் செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முடிவில் ஊராட்சி செயலா் கண்ணன் நன்றி கூறினாா்.

இதனைதொடா்ந்து வானகிரி, பூம்புகாா் ஊராட்சிகளில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.பட விளக்கம் காவிரிபூம்பட்டிணம் ஊராட்சியில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டபோது எடுத்தபடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com