Enable Javscript for better performance
அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய இளைஞா் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய இளைஞா் கைது

    By DIN  |   Published on : 09th October 2019 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழ்வேளூா் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

    திங்கள்கிழமை வேளாங்கண்ணியிலிருந்து - திருச்சி சென்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்து கீழ்வேளூா் அருகேயுள்ள சிக்கவலம் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த இளைஞா் ஒருவா் மதுபாட்டிலை வீசி பேருந்து கண்ணாடியை உடைத்தாராம்.

    இதுகுறித்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் திருச்சி, விமான நிலையம் காமராஜா் நகரைச் சோ்ந்த ச. சந்திரசேகரன் அளித்தப் புகாரின் பேரில் கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, நாகை மாவட்டம், தேமங்கலம்,பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஸ்டாலின் (23) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai