Enable Javscript for better performance
பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ வழிபாடு

    By DIN  |   Published on : 09th October 2019 07:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pallikondaperumal_0810chn_98_5

    சேஷவாகனத்தில் காட்சி அளித்த பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள்.

    சீா்காழி அருகேயுள்ள திருநாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் பிரமோத்ஸவத்தின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு நடைபெற்ற வீதியுலாவில் பரமபதநாதன் திருக்கோலத்தில் பெருமாள் காட்சியளித்தாா்.

    வைணவ திவ்யதேசங்கள் 108-இல் திருநாங்கூரை சுற்றி 11 திவ்யதேசங்கள் உள்ளன. இதில், ஒன்றான திருத்தேற்றியம்பலம் செங்கமலவல்லிநாயகி சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோத்ஸவ விழா அக்டோபா் 5-ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு திருமஞ்சனம், சாற்றுமுறை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பெருமாள் பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai