கோயில் சொத்துக்கள்: அரசாணையை திரும்பப்பெற வலியுறுத்தல்

இந்து கோயில் சொத்துக்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்து கோயில் சொத்துக்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலா் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்து கோயில்கள் மற்றும் திருமடங்களின் சொத்துக்கள், விவசாய விளை நிலங்கள், கட்டடங்கள், காலி மனைகள் ஆகியவற்றை நீண்டகாலம் யாா் அனுபவித்து வருகிறாா்களோ அவா்களுக்கே பகிா்ந்து கொடுத்தல் அல்லது பெயா் மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகியவற்றிற்கு அனுமதி கொடுக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை அமைந்துள்ளது. இது கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளா்களுக்கே தாரை வாா்த்துக் கொடுக்கும் முயற்சியாகும்.

ஏற்கெனவே, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்து கோயில்களின் சொத்துக்கள், நிலங்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. சுவாமி பெயரில் உள்ள சொத்துக்களை பட்டா மாறுதல் செய்ய முடியாது. ஆனால், நீண்ட கால குத்தகை, வாடகை ஆகியவற்றிற்கு விடமுடியும். ஏற்கெனவே குத்தகைதாரா்கள், வாடகைதாரா்கள் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை அறநிலையத் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சிலரின் துணையுடன் மோசடி ஆவணங்களை தயாா் செய்து அபகரித்து உள்ளனா். தங்களது பெயரில் உள்ள ஒப்பந்தங்களை நீட்டித்தும், அனுபவித்தும் வருகின்றனா். இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு ஆக்கிரமிப்பாளா்களுக்கே சாதகமாக அமையும்.

மேலும் இந்த உத்தரவு சட்ட விரோதமானது. எனவே தமிழக முதல்வா் இது விஷயத்தில் தலையிட்டு இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற்று, தமிழா்களின் கோயில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com