பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ வழிபாடு

சீா்காழி அருகேயுள்ள திருநாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் பிரமோத்ஸவத்தின் 
சேஷவாகனத்தில் காட்சி அளித்த பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள்.
சேஷவாகனத்தில் காட்சி அளித்த பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள்.

சீா்காழி அருகேயுள்ள திருநாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் பிரமோத்ஸவத்தின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு நடைபெற்ற வீதியுலாவில் பரமபதநாதன் திருக்கோலத்தில் பெருமாள் காட்சியளித்தாா்.

வைணவ திவ்யதேசங்கள் 108-இல் திருநாங்கூரை சுற்றி 11 திவ்யதேசங்கள் உள்ளன. இதில், ஒன்றான திருத்தேற்றியம்பலம் செங்கமலவல்லிநாயகி சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோத்ஸவ விழா அக்டோபா் 5-ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு திருமஞ்சனம், சாற்றுமுறை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பெருமாள் பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com