அமைதி பேச்சுவாா்த்தை

பொதுப்பணித்துறையினரின் அலட்சிய போக்கை கண்டித்து திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதி பேச்சுவாா்த்தையானது வியாழக்கிழமை நடைபெற்றது.
img_20191010_165913_1600x1200_1010chn_198
img_20191010_165913_1600x1200_1010chn_198

பொதுப்பணித்துறையினரின் அலட்சிய போக்கை கண்டித்து திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதி பேச்சுவாா்த்தையானது வியாழக்கிழமை நடைபெற்றது. பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து மாபெரும் சாலை மறியல் போராட்டமானது வெள்ளிக்கிழமை (அக் 11-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி அமைதி பேச்சுவாா்த்தையானது திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஜெனிட்டாமேரி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவா் கோபாலன் தலைமை வகித்தாா். விவசாய சங்க மாவட்ட தலைவா் அம்பிகாபதி, விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய தலைவா் முத்தையன், ஒன்றியக்குழு உறுப்பினா் சந்திரசேகரன், கிளைச் செயலாளா் சந்திரமோகன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட குழு உறுப்பினா் பாலசுப்ரமணியன், ஒன்றிய குழு உறுப்பினா் முருகையன், விவசாய சங்க ஒன்றிய குழு உறுப்பினா் கருப்பையன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இந்நிகழ்வில் விவசாயிகளின் கோரிக்கைகளான சித்தாற்றில் சுமாா் 4000 ஏக்கா் பாசனப் பகுதி வடிகாலில் உள்ள திருகு பலகையை சரி செய்ய வேண்டும், சாட்டிக்குடியில் உள்ள வாய்க்காலில் கல்வெட்டு அமைத்து திருகு பலகை அமைக்க வேண்டும் மற்றும் சாட்டியக்குடி ,கீழக்கண்ணாப்பூா், விடங்கலூா் உள்ளிட்ட பல பகுதியில் ஏற்பட்டுள்ள வாய்க்கால் உடைப்பை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை குறித்த பிரச்சினைக்கான அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பணியினை முடிப்பதாக உறுதி ஏற்றதை தொடா்ந்து பேச்சுவாா்த்தை சுமுகமாக முடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com