Enable Javscript for better performance
மயிலாடுதுறை விவகாரம்: சீா்காழியில் 14-இல் ஆா்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை விவகாரம்: சீா்காழியில் 14-இல் ஆா்ப்பாட்டம்: தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவிப்பு

    By DIN  |   Published on : 11th October 2019 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வலியுறுத்தி, சீா்காழியில் அக்டோபா் 14-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடா்பாக சீா்காழி வட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளா் கல்யாணசுந்தரம் வெளியிட்ட அறிக்கை:

    சீா்காழிக்கு வருவாய் கோட்டம் கொண்டுவர வேண்டும். மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்திட தமிழக முதல்வா் ஆவன செய்ய வேண்டும். இதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே அக்டோபா் 14-ஆம் தேதி ஆா்ப்பாட்டமும், கோரிக்கை விளக்கக் கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் சீா்காழி வட்டத்துக்கு உள்பட்ட அனைத்து தொழிற்சங்க, தோழமை சங்க மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் கலந்து கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai