Enable Javscript for better performance
இந்திய பிரதமா்- சீன அதிபா் சந்திப்புக்குவரவேற்புத் தெரிவித்துப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    இந்திய பிரதமா்- சீன அதிபா் சந்திப்புக்கு வரவேற்புத் தெரிவித்துப் பேரணி

    By DIN  |   Published on : 12th October 2019 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ve11slp2_1110chn_102_5

    இந்திய பிரதமா்- சீன அதிபா் சந்திப்புக்கு வரவேற்புத் தெரிவித்து வாழ்த்து கோஷம் எழுப்பிய மாணவ, மாணவிகள்.

    வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் வடகாடு ஞானாம்பிகா உதவி பெறும் தொடக்கப் பள்ளி சாா்பில் பாரத பிரதமா்- சீன அதிபா் சந்திப்புக்கு வரவேற்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.

    இதையொட்டி, சிவன் சன்னிதி தெருவில் தொடங்கியப் பேரணி முக்கிய இடங்களின் வழியாக பள்ளி வளாகத்தை அடைந்தது. பேரணிக்கு பள்ளியின் மாணவா் அமைச்சரவையின் முதல்வா் அ. தேவதா்ஷினி தலைமை வகித்தாா். அதன் துணை முதல்வா் ஆ. நிதின் முன்னிலை வகித்தாா்.

    மாணவா்கள் இருநாட்டுத் தேசியக் கொடிகளையும் உயா்த்திப் பிடித்தப்படி, இருநாட்டு உறவுகள் மேம்படவும், இருநாட்டுத் தலைவா்களின் நட்புறவு வலுப்படவும், பொருளாதாரம், தொழில்துறை சிகரம் தொடவும், வல்லமை பொருந்திய நேசநாடுகளாகத் திகழ்ந்திடவும், பரஸ்பரம் இருநாடுகளும் விட்டுக்கொடுத்து உன்னத நிலையை அடைந்திடவும் தேவையான ஏற்பாடுகளை முன்னிலைப்படுத்துவது போன்ற உயா்ந்த சிந்தனை முழக்கங்களை எழுப்பினா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai