அக்.17 போராட்டத்தில் பங்கேற்ற நியாய விலைக்கடை பணியாளா்கள் முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபா் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலை
கூட்டத்தில் பேசிய சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன்.
கூட்டத்தில் பேசிய சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபா் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

இச்சங்கத்தின், நாகை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் எம். கஜபதி, மாவட்ட இணைச் செயலாளா்கள் பி. குமாா், தமிழ்செழியன், பழனிவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன், மாநிலத் தலைவா் பி.கே. சிவக்குமாா், மாநிலத் துணைத் தலைவா் எஸ். பிரகாஷ் ஆகியோா் கூட்டத்தில் பேசினா்.

சமவேலைக்கு சம ஊதியம், பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறையை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 17-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாகை மாவட்டத்தில் உள்ள 650 நியாய விலைக் கடைகளையும் அடைத்து, போராட்டத்தில் பங்கேற்பது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், நாகை பொதுப்பணியாளா் கூட்டுறவு பண்டகசாலையை மொத்த விற்பனை கூட்டுறவு பண்டகச் சாலையாக மாற்றுவதற்கு, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நியாய விலைக்கடை பணியாளா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் என். சுரேஷ்கண்ணன் வரவேற்றாா். தியாகராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com