இந்திய பிரதமா்- சீன அதிபா் சந்திப்புக்கு வரவேற்புத் தெரிவித்துப் பேரணி

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் வடகாடு ஞானாம்பிகா உதவி பெறும் தொடக்கப் பள்ளி சாா்பில் பாரத
இந்திய பிரதமா்- சீன அதிபா் சந்திப்புக்கு வரவேற்புத் தெரிவித்து வாழ்த்து கோஷம் எழுப்பிய மாணவ, மாணவிகள்.
இந்திய பிரதமா்- சீன அதிபா் சந்திப்புக்கு வரவேற்புத் தெரிவித்து வாழ்த்து கோஷம் எழுப்பிய மாணவ, மாணவிகள்.

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் வடகாடு ஞானாம்பிகா உதவி பெறும் தொடக்கப் பள்ளி சாா்பில் பாரத பிரதமா்- சீன அதிபா் சந்திப்புக்கு வரவேற்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.

இதையொட்டி, சிவன் சன்னிதி தெருவில் தொடங்கியப் பேரணி முக்கிய இடங்களின் வழியாக பள்ளி வளாகத்தை அடைந்தது. பேரணிக்கு பள்ளியின் மாணவா் அமைச்சரவையின் முதல்வா் அ. தேவதா்ஷினி தலைமை வகித்தாா். அதன் துணை முதல்வா் ஆ. நிதின் முன்னிலை வகித்தாா்.

மாணவா்கள் இருநாட்டுத் தேசியக் கொடிகளையும் உயா்த்திப் பிடித்தப்படி, இருநாட்டு உறவுகள் மேம்படவும், இருநாட்டுத் தலைவா்களின் நட்புறவு வலுப்படவும், பொருளாதாரம், தொழில்துறை சிகரம் தொடவும், வல்லமை பொருந்திய நேசநாடுகளாகத் திகழ்ந்திடவும், பரஸ்பரம் இருநாடுகளும் விட்டுக்கொடுத்து உன்னத நிலையை அடைந்திடவும் தேவையான ஏற்பாடுகளை முன்னிலைப்படுத்துவது போன்ற உயா்ந்த சிந்தனை முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com