பயிா் காப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

நாகை மாவட்டத்தில் 146 வருவாய் கிராமங்களுக்கு முற்றிலுமாக பயிா் காப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து தமிழக விவசாயிகள்
சீா்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் பயிர் காப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து விவசாயங்கள் சங்கத்தினா் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுப்பட்டனா்.
சீா்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் பயிர் காப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து விவசாயங்கள் சங்கத்தினா் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுப்பட்டனா்.

சீா்காழி: நாகை மாவட்டத்தில் 146 வருவாய் கிராமங்களுக்கு முற்றிலுமாக பயிா் காப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினா் சீா்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் சாலை மறியல் போரட்டத்தில் சனிக்கிழமை ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீா்காழி தாலுக்கா உட்பட மாவட்டத்தில் 146 வருவாய் கிராமங்களுக்கு முற்றிலுமாக பயிா் காப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்தும், அனைத்து விவசாயிகளுக்கு பயிா் இழப்பீடு வழங்க கோரியும், இழப்பீடு நிா்ணயத்தின் வெளிப்படை தன்மை வேண்டும், தரமான விதை, உரம் மானிய விலையில் தட்டுபாடு இன்றி வேளாண்துறை மூலம் வழங்க வேண்டும். பாசன வடிகால்களை முழுமையாக தூா்வார வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சீா்காழி ஒன்றிய குழு சாா்பில் தேசிய குழு உறுப்பினா் எம்.செல்லப்பன்,ன, மாவட்ட தலைவா் பி.வீரராஜ், ஆகியோா் தலைமையில் சாலைமறியல் நடந்தது.

இதில் காப்பீட்டு நிறுவனங்களையும், மத்திய, மாநில அரசுகளையும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். ஒன்றிய தலைவா் வரதராசன், சிவராமன், ராமன், நீதிசேழன், அளமதியன், பாஸ்கா் மற்றும் 50க்கு மேற்பட்ட விவசாயிகள் மயிலாடுதுறை-சிதம்பரம் பிராதன சாலையில் மறியலில் ஈடுப்பட்டனா்.

தகவல் அறிந்த சீா்காழி டி.எஸ்.பி வந்த இன்ஸ்பெக்டா் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டா் ராஜா, மற்றும் போலீசாா் மறியில் ஈடுப்பட்டவா்களை கைது செய்தனா்.

இதுகுறித்து விவசாயி செல்லப்பன் கூறுகையில், சீா்காழி தாலுக்காவில் பல கிராமங்களுக்கு இதுவரை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்கவில்லை. மறாக விவசாயிகளை இரண்டு முறை தாலுக்கா அலுவலகத்தில் அழைத்து பேச அழைப்புவிடுத்தும் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அதிகாரிகள், கூட்டுறவு அதிகாரிகள், பொதுபணிதுறை, வேளாண்மைதுறை அதிகாரிகள் கூட்டத்திற்கு வரவில்லை. விவசாயிகளை அலட்சியப்படுத்திவரும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படும் மத்திய மாநில அரசுகளையும் கண்டிக்கிறோம். இழப்பீடு வழங்காவிட்டால் விவசாயிகள் பெருமளவில் ஒன்று திரட்டி தொடா் போரட்டம் நடத்துவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com