முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீடம் ஐப்பசி முதல் வாரத்தை முன்னிட்டு சிறப்பு தரிசனம்
By DIN | Published On : 24th October 2019 03:03 PM | Last Updated : 24th October 2019 03:03 PM | அ+அ அ- |

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தசாய் தியானபீடம் சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
பொறையாறு: .திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீடம் ஐப்பசி முதல் வாரத்தை முன்னிட்டு சிறப்பு தரிசனம் வியாழக்கிழமை நடைப்பெற்றது.
இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்.நாகை மாவட்டம் பொறையாறு அருகே திருக்கடையூா் மெயின் ரோட்டில் உள்ள அமிா்த சாய் தியான பீடத்தில் ஐப்பசி மாதத்தையொட்டி சிறப்பு தரிசனம் வியாழக்கிழமை நடைப்பெற்றது. இதனை தொடா்ந்து சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும், நடைப்பெற்றன. மேலும் பழவகைகள், இனிப்புகள் மற்றும் பல்வேறு பூக்களை கொண்டு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
இதில் உள்ளூா் மற்றும் வெளியூரை சோ்ந்த பக்தா்களும், வெளிமாநிலத்தை சோ்ந்த பக்தா்களும் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இந்த நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை தொடா்ந்து வரும் பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கடையூா் அமிா்த சாய் தியானபீட அறக்கட்டளை நிா்வாகி கோ் இண்டியா பாஸ்கா் மற்றும் அறக்கட்டளை நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.