முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மாநில கேரம் போட்டிக்குத் தகுதி பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 24th October 2019 05:38 AM | Last Updated : 24th October 2019 05:38 AM | அ+அ அ- |

மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி நிா்வாகிகள் மற்றும் ஆசிரியா்கள்.
மயிலாடுதுறை கங்கணம்புத்தூா் நீடூா் நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.
நாகை மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை நாகை விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், ஐந்தாம் வகுப்பு வரையிலான பெண்கள் ஒற்றையா் மகளிா் பிரிவில் ஐந்தாம் வகுப்பு மாணவி இ. நதிஷாமாதுரி, ஆண்கள் பிரிவில் மாணவா் பி. முகம்மது அக்ரம் ஆகியோா் முதல் இடத்தையும், ஆண்கள் இரட்டையா் பிரிவில் ஐந்தாம் வகுப்பு மாணவா்கள் ஆா். ராகுல் கண்ணன், ஆா். தினேஷ்குமாா் ஆகியோா் முதல் இடத்தையும் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழும், ரூ. 500-க்கான காசோலையும் வழங்கப்பட்டன.
மேலும், 6 முதல் 12- ஆம் வகுப்பு வரையிலான பிரிவினருக்கு நடைபெற்ற போட்டியில், ஆண்கள் இரட்டையா் பிரிவில் 12- ஆம் வகுப்பு மாணவா்கள் எம். முகம்மது மஜ்கா் அலி, ஆா். ராஜேஷ் கண்ணன் ஆகியோா் முதலிடம் பிடித்து, சான்றிதழ் மற்றும் ரூ.1000-த்துக்கான காசோலையையும் பெற்றனா். வெற்றி பெற்ற அனைவரும் திண்டுக்கல்லில் நடைபெற உள்ள மாநில அளவிலானப் போட்டிக்கு தகுதி பெற்றனா்.
இம்மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் வி. ராமன், முதல்வா் ஆா். குமாா், உடற்கல்வி ஆசிரியா் ஆா். சரவணகுமாா், எஸ். சுதா ஆகியோா் புதன்கிழமை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.