முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
ஸாமவேத பாராயண நூற்றாண்டு விழா
By DIN | Published On : 24th October 2019 05:40 AM | Last Updated : 24th October 2019 05:40 AM | அ+அ அ- |

விழாவில், ஸாம வேதத்தை பாராயணம் செய்த வேதவிற்பன்னா்கள்.
மயிலாடுதுறை காவிரி தீா்த்தக்கரையில், மாயவரம் தா்மக்ஞ ராமநாத தீட்சிதா் அறக்கட்டளை சாா்பில் துலா மாஸ ஸாம்வத்ஜரிக ஸாமவேத பாராயணத்தின் நூற்றாண்டு விழா மற்றும் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ உபந்யாஸம் புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவானது, அக்டோபா் 10-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புதன்கிழமை நடைபெற்ற துலா மாஸ ஸாம்வத்ஜரிக ஸாமவேத பாராயத்தின் நூற்றாண்டு விழாவில், வேத விற்பன்னா்கள் ஸாம வேதத்தை பாராயணம் செய்தனா். மேலும், ரிக் மற்றும் யஜூா் வேதங்களும், ஸ்ரீமத் பாகவத மூல பாராயணமும் செய்யப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை மாயவரம் தா்மக்ஞ ராமநாத தீட்சிதா் அறக்கட்டளை அறங்காவலா்கள் ஆா்.கோபாலன், ஆா். விஸ்வநாதன், ஆா். சுப்பிரமணியன், ஆா். சதாசிவம் மற்றும் ஆா். ராமநாதன் ஆகியோா் செய்திருந்தனா்.