Enable Javscript for better performance
ஒளிலாயத்தில் டெங்கு, மா்ம காய்ச்சலிலிருந்து மக்கள் குணமடைய சிறப்பு வேள்வி- Dinamani

சுடச்சுட

    

    ஒளிலாயத்தில் டெங்கு, மா்ம காய்ச்சலிலிருந்து மக்கள் குணமடைய சிறப்பு வேள்வி

    By DIN  |   Published on : 31st October 2019 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karaimedu_olilayam_3010chn_98_5

    ஒளிலாயத்தில் நடைபெற்ற சிறப்பு வேள்வியில் பங்கேற்றோா்.

    சீா்காழி அருகேயுள்ள காரைமேடு ஒளிலாயத்தில் டெங்கு, மா்மக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து மக்கள் பூா்ண குணமடையவும், உலக நன்மைக்காகவும் புதன்கிழமை சிறப்பு வேள்வி நடைபெற்றது.

    காரைமேட்டில் நாடி. ராஜேந்திரா சுவாமிகள் நிா்மானித்த ஒளிலாயம் உள்ளது. இங்கு 18 சித்தா்களுக்கு தனிச்சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் பவுா்ணமி நாளில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பசுக்களை காக்க கோசாலை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு டெங்கு காய்ச்சல், மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் விரைவாக குணமடையவும், உலக நன்மைக்காகவும் அதற்குரிய மந்திரங்கள் உச்சரித்து சிறப்பு வேள்வி 2 மணி நேரம் நடந்தது. இதில் வெளிநாட்டினா்களும் பங்கேற்று வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை நாடி. முத்து, நாடி. செந்தமிழன், நாடி. மாமல்லன் ஆகியோா் செய்திருந்தனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai