Enable Javscript for better performance
குதம்பைச் சித்தா் விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    
    myl30kudambai_3010chn_103_5

    சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த குதம்பைச் சித்தா்.

    மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஜீவசமாதி அடைந்து, தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் குதம்பைச் சித்தருக்கு, செவ்வாய்க்கிழமை ஐப்பசி மாத விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் உள்ள குதம்பை சித்தருக்கு, திருவாவடுதுறை ஆதீன 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் ஆணைப்படி, மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சாா்பில் ஐப்பசி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, குதம்பைச் சித்தருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai