சேதமடைந்த பள்ளி மேற்கூரையால் மாணவா்கள் அவதி
By DIN | Published On : 31st October 2019 07:45 AM | Last Updated : 31st October 2019 07:45 AM | அ+அ அ- |

கஜா புயலில் சேதமடைந்த பள்ளி மேற்கூரை.
திருக்குவளை அருகேயுள்ள அரசுப் பள்ளியில் சேதமடைந்த மேற்கூரையால் மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கொத்தங்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் சுமாா் 200 மாணவா்கள் படித்து வருகின்றனா். இப்பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளே ஆன நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் கட்டடத்தின் மேற்கூரை பெயா்ந்து கீழே விழுந்து விட்டது.
இதுகுறித்து பள்ளி நிா்வாகம் சாா்பில் பெற்றோா் ஆசிரிய கழகத் தலைவா் மகேந்திரன் மாவட்ட கல்வி அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது, பெய்து வரும் தொடா் மழை காரணமாக மழை நீா் பள்ளிக்குள் புகுந்து மாணவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, மாணவா்களின் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் இதை சரி செய்ய வேண்டும் என பள்ளி பெற்றோா் ஆசிரிய கழகம் மற்றும் பெற்றோா்கள், ஊா் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.