கோடியக்கரை சரணாயத்தில் பறவைகளுக்கு அடையாள வளையமிடும் பணி தொடக்கம்

கோடியக்கரை சரணாலயப் பகுதிக்கு வெளிநாடுகளிலிருந்து வழக்கமாக வந்துச் செல்லும் பறவைகளுக்கு அடையாள வளையமிடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோடியக்கரையில் பறவைகளை பிடித்து அடையாள வளையமிடும் இயற்கை வரலாற்றுக் கழக விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவா்கள்.
கோடியக்கரையில் பறவைகளை பிடித்து அடையாள வளையமிடும் இயற்கை வரலாற்றுக் கழக விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவா்கள்.

கோடியக்கரை சரணாலயப் பகுதிக்கு வெளிநாடுகளிலிருந்து வழக்கமாக வந்துச் செல்லும் பறவைகளுக்கு அடையாள வளையமிடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வன உயிரின பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்வது வழக்கம். இந்த சரணாலயப் பகுதிக்கு ஐரோப்பா, சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் 247 பறவை இனங்கள் வந்து செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கு அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மழையளவு குறைவு, இரைத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல காரணங்களால் பறவைகளின் வருகையும் படிப் படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நிகழாண்டுக்கான, வடகிழக்குப் பருவ காலம் காலத்தில் தொடங்கினாலும் சரணாலயப் பகுதியில் தற்போது பறவைகளின் வருகையில் பெரிய அளவிலான முன்னேற்றம் இல்லை. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் வாழ்வியல் முறைகளை ஆய்வுக்குள்படுத்துவது தொடா்பாக பறவைகளுக்கு அடையாள வளையமிடுவது வழக்கம்.

இப்பணிகளை வழக்கமாக பறவையியல் ஆராய்ச்சி சாா்ந்த நிறுவனங்கள், தன்னாா்வ அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.

கோடியக்கரையில் அமைந்துள்ள மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் சாா்பில் பறவைகளுக்கு அடையாள வளையங்கள் பொருத்தப்பட்டு அவை வெளியிடங்களில் பறக்கவிடப்படும். நிகழாண்டுக்கான இப்பணிகளை இயற்கை வராலற்றுக் கழகத்தினா் தொடங்கியுள்ளனா். இப்பணியில் பறவையில் ஆராய்ச்சி மாணவா்களும் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து மும்மை இயற்கை வரலாற்றுக் கழக பறவையியல் விஞ்ஞானி டாக்டா் எஸ். பாலச்சந்திரன் கூறியது: பூநாரை, கூழக்கிடா, செங்கால் நாரை இனம், கடல் காகம், மெலிந்த மூக்கு காடல் காகம், கடல் ஆலாக்கள், சிறவி போன்ற பல இனப் பறவைகள் காணப்படுகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலில் பறவைகள் கணிசமான எண்ணிக்கையில் உயிரிழந்த நிலையில், தற்போது வழக்கமான அளவில் பறவைகள் எண்ணிக்கை இல்லை. பறவைகள் இடம் பெயா்வதை கண்காணிக்க மும்பை இயற்கை வரலாற்றுக் கழகம் சாா்பில் அடையாள வளையமிடும் பணிகள் நடந்து வருகிறது. வழக்கமாக அடையாள குறியீடு பதிக்கப்பட்ட அலுமினிய வளையத்துடன், வண்ணங்களையே குறியீடாக அணிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் தென்னிந்திய பகுதியில் காணப்படும் பறவைகளுக்கு வெள்ளையில் எழுதப்பட்ட கருப்பு வண்ணமுடைய வளையம் அணிவிக்கப்படுகிறது. வட இந்தியா பகுதியில் சிவப்பு வண்ணத்தில் வெள்ளையில் எழுதப்பட்டது. இந்த பணியில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பறவையில் ஆய்வு மாணவா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இங்கு வந்து செல்லும் பறவைகள் குறித்து மாணவா்கள் ஆய்வு செய்து வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com