சுடச்சுட

  

  மயிலாடுதுறையில், ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா மற்றும் போக்குவரத்து காவல் துறை சார்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
  ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா தலைவர் செந்தில் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற பேரணியை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஆ. மூர்த்தி தொடங்கி வைத்தார். 
  பேரணியில் பங்கேற்றோர், தலைகவசம் உயிர்க்கவசம், மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர், மித வேகம் மிக நன்று, அதிக பாரம் ஆபத்தில் முடியும், படியில் பயணம் நொடியில் மரணம் உள்ளிட்ட போக்குவரத்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். காவிரி நகரில் தொடங்கிய பேரணி, பூக்கடைத்தெரு, கூறைநாடு, காந்திஜி சாலை வழியாக சென்று கிட்டப்பா அங்காடி முன்பு நிறைவடைந்தது. இதில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஆர். மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai