சுடச்சுட

  

  நாகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை இரவு பரவலாக நல்ல மழை பெய்தது.
  வெப்ப சலனம் காரணமாக புதன்கிழமை  மழைப் பொழிவு இருக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், நாகை  மாவட்டத்தில் புதன்கிழமை காலை முதல் மாலை 5 மணி வரை தெளிவான வானிலையும், இரவு 7 - மணிக்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதற்கிடையில், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இரவு 11- மணிக்கு மேல் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த மழையால், நாகையில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai